இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் எரிபொருள் கடனை அடைக்கப்பதற்குத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இதில், பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் ஈரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் அலிரெஸா பேமன்பெக் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டில், ஈரானின் சந்தையில் 47 சதவீதமாக காணப்பட்ட இலங்கையின் தேயிலைத்துறை, 2020ஆம் ஆண்டில் 25 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கொடுப்பனவுகள் மற்றும் ஈரான் ரியாலின் பெறுமதி வீழ்ச்சி என்பன மட்டும் தான் காரணம் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சு கூறியுள்ளது.
இந்தநிலையில், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால், ஈரானின் தேசிய எரிபொருள் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய, 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான நீண்டகால கடனைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை தயாரிப்பதற்கும் இந்த உடன்படிக்கை மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
1 Comment