செய்திகள்
எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால்…. : அனுரகுமார திஸநாயக்க

ஊழல் தொடர்பான விசாரணை நடத்தவோ அல்லது தீர்மானம் எடுக்கவோ எனக்கு அதிகாரம் இருக்கும் என்றால் இந்த நாடாளுமன்றில் பலர் இருக்க மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
சட்டம் ஒழுங்கு அமைச்சரின் செயற்பாடு குறித்தும் அவர் கூறியுள்ளார்.
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கோ, அது குறித்து விசாரணை நடத்தவோ, அல்லது தீர்மானம் எடுக்கவோ எனக்கு அதிகாரம் இருக்கும் என்றால் இன்று இந்தச் சபையில் பலர் இருக்க மாட்டார்கள் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.
ஊழல் குற்றங்களுக்கு எதிராக போராடும் சகல உரிமையும் எனக்கு உள்ளது. ஆகவே எம்மால் மட்டுமே ஊழல் குற்றங்களைத் தடுக்கவும் முடியும்.
எனது மனசாட்சிக்கு தெரியும், நான் எந்த ஊழல் குற்றங்களுக்கும் துணை போகும் நபர் இல்லை என்று என அவர் கூறியுள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login