சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளரும் சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க தடுப்பூசி அட்டை இன்றி பயணித்தமையால் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய பசுபிக் சுற்றுச்சூழல் பிராந்திய மாநாட்டு ஒன்றில் கலந்துகொள்ள நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த நிலையில் தடுப்பூசி செலுத்திய அட்டை கொண்டு வராமையால் அவர் பல மணிநேரம் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் தனது தடுப்பூசி அட்டையின் படத்தைக் கையடக்க தொலைபேசியில் பெற்றுக்கொண்டு, அதனைக் காண்பித்த நிலையிலேயே விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment