தனது பெயருக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோருவேன்.
இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் தனக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கும் தயார்.
வெள்ளைப்பூண்டு கொள்வனவு மற்றும் விநியோக நடவடிக்கையில் மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் நுகர்வோர் விவசாய அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் துஷான் குணவர்த்தன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான குற்றச்சாட்டானது எனது அரசியல் செல்வாக்கை சரிய செய்ய மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி.
நான் ஊழல் மோசடியில் ஈடுபடுகின்ற அரசியல்வாதி கிடையாது. இது தொடர்பில் அரச தரப்பினர் எனக்கு தொடர்பிருக்கிறது என்பதை நிரூபித்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மட்டுமல்லாது இலங்கை அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன் – என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment