இலங்கை
ரயில் சேவை மீள ஆரம்பம்?
பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்.
இதனை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக ரயில் சேவை முடக்க நிலையில் உள்ளதால் புகையிரதத் திணைக்களத்துக்கு 500 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
எதிர்வரும் காலங்களில் மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்க திணைக்கள மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login