கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கராயன் பகுதியைச் சேர்ந்த (வயது–27) பேரம்பலநாதன் கேசவன் என்பவரே உயிரிழந்தவராவார்.
கடை ஒன்றில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் மின்தாக்கியதில் அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
பின் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment