Lohan Ratwatte Y78678
இலங்கைசெய்திகள்

கைதிகளை அச்சுறுத்த எனக்கு பைத்தியமில்லை -லொஹான் பல்டி

Share

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டினேன் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கிறேன் என சிறைச்சாலை மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

சிறைகளில் நடைபெறுகின்ற குற்றங்களை நான் தடுப்பதனால் இது போன்ற குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துகின்றனர்.

எனினும் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நேரில் சென்று எனது விளக்கத்தை அளிக்கவுள்ளேன்.

அந்த சிறையில் உள்ள கைதிகளை அச்சுறுத்தவில்லை. அங்கு கண்காணிப்பு விஜயத்தையே மேற்கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் என்ற அடிப்படையில் என்னால் எவ்வேளையிலும் சிறைகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ள முடியும்.  அதற்கு எவருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. எனது பொறுப்பில் 29 சிறைச்சாலைகளும் இரண்டு மறுவாழ்வு நிலையங்களும் உள்ளன. நான் இரவு பகல் என எந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கு சென்று நிலைமைகளை கண்காணிக்க முடியும்.

சிறைகளுள் என்ன நடைபெறுகின்றன என்பதை கண்காணிக்க திடீரென விஜயம் செல்வேன்.
அத்துடன் எந்தக் கைதிகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மண்டியிட வைத்து கொலை அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அவ்வாறு செய்ய எனக்கு பைத்தியமில்லை.

நான் ஒரு பெண்ணுடன் வெலிக்கட சிறைக்கு சென்றேன் எனக் கூறப்படும் கதைகள் போலியானவை. இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெளிவுபடுத்துவேன்’’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....