நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரங்கின் மூலம் நேர்மறையான தாக்கத்தை இலங்கை காணத் தொடங்கியுள்ளது.
எனினும் நாடு சிவப்பு வலயத்திலிருந்து மீளவில்லை. தினந்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட வண்ணம் உள்ளனர்.
ஒட்டு மொத்த பலன்களையும் பெற வேண்டுமாயின் இந்த பயணக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம் மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்தால் 8 ஆயிரத்து 500 உயிர்களைக் காப்பாற்றலாம். ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீடித்தால் 10 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
தற்போதைய கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் நோய் தீவிரமடைந்து பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளது எனவும் அந்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
Leave a comment