தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒட்சிசன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் கொவிட் – 19 ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 39 ஆயிரத்து 160 கட்டில்கள் காணப்படுகின்ற நிலையில், தற்போது 34 ஆயிரத்து 800 கட்டில்களில் கொவிட் நோயாளிகள் உள்ளனர் என வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இதுவரையில் 14 ஆயிரத்து 154 கொவிட் நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.
Leave a comment