நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி முதற்கட்டமாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ள 17 ஆயிரம் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரண வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் நிலையில் அதன் பின் சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய போக்குவரத்தை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சாரதிகள், நடத்துநர்கள் இருவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.
பயணிகளும் தடுப்பூசிகளை ஏற்றியிருத்தல் வேண்டும்.
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்லுதல் வேண்டும் போன்ற விடயங்கள் உள்ளடங்கிய புதிய போக்குவரத்துத் திட்டம வகுக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் கொவிட் செயலணி கூடும் முன் குறித்த திட்டத்தை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment