4 29
இலங்கைசெய்திகள்

மொட்டு வேட்பாளர் நாமலுக்கு ஆதரவு திரட்டி 120 பிரதான கூட்டங்கள்

Share

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa) ஆதரவு திரட்டும் வகையில் பிரதான 120 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று இலங்கைக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதுவரும் ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இதில் 40 கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வார் எனவும், முதலாவது பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தல் களத்தில் தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் உள்ளார். நாமல் ராஜபக்சவுக்கு சஜித்துடன்தான் போட்டி உள்ளது.

தேர்தல் பிரசாரம் ஆரம்பமான பின்னர் சஜித்தையும் அவர் முந்துவார். நாமல் ராஜபக்ச களமிறங்கியுள்ளதால் ரணில் விக்ரமசிங்க அச்சத்தில் உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பக்கம் சென்றிருந்தாலும், மக்கள் மொட்டுக் கட்சியுடன்தான் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...