tamilni 309 scaled
இலங்கைசெய்திகள்

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பூசகருக்கு கடூழிய சிறை

Share

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பூசகருக்கு கடூழிய சிறை

கிளிநொச்சி பளைப் பகுதியில் பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

8 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி பளைப் பகுதியில கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி தனக்கு உறவு முறையான பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டு நேற்று (18-01-2024) குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் பதினாறு வயதிற்கு குறைவான சிறுவர்கள் இவ்வாறு பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலும் ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வாறு மேல் நீதிமன்றம் வரைக்கும் கொண்டு வரப்படுகின்றன.

மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்ட மன்று பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...