இந்தியாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனாக கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பிறகு டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது அந்நாட்டின் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து பஸில் ராஜபக்ச பேச்சு நடத்தவுள்ளார்.
இதன்போதே மேற்படி தொகை நிதி கடனாகக் கோரப்படவுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்காகவே கடன் பெறப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment