gmoa
இலங்கைசெய்திகள்

வேலைநிறுத்தத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது!!

Share

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் அடையாள வேலை நிறுத்தத்தால்  நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் உயிரைப் பணயம் வைக்கும் வேலைநிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், புதன்கிழமை (08) தெரிவித்தது.

புதன்கிழமை (08) காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில்,  மருத்துவத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் வரலாற்றில் முதல் தடவையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அவர் கூறினார்.

அவசரகால சேவைகளுக்குச் செல்லும் வைத்திய நிபுணர்களைத் தவிர, நாட்டிலுள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் கடமையாற்றும் வைத்தியர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாரம்பரியமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாத பிரிவினரும் அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தயங்கமாட்டோம் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...