மாவட்ட எல்லைகளில் முப்படையினர் களமிறக்கம்!!
அனைத்து மாவட்டங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை உள்ளடக்கிய சிறப்பு வீதித் தடைகளை நிறுவ பொலிஸ் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறும் தனிநபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இந்த சிறப்பு நடவடிக்கைக்கு முப்படையினரும் பொலிஸாருடன் இணைந்து கடமையாற்றுவர் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொலிஸ் வீதித் தடைகள் மற்றும் மொபைல் ரோந்து எல்லைகளுக்குள் பயணம் செய்யும் நபர்களை அடையாளம் காணும், அதே நேரத்தில் மேல் மாகாணத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளை உள்ளடக்கிய கடுமையான வீதித் தடைகள் செயற்படுத்தப்படும்.
எல்லைகளைத் தாண்டி பயணம் செய்தால் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் கைதுசெய்யப்படுவார்கள். முகக்கவசம் தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இன்று முதல் கண்டிப்பாக விதிக்கப்படும்.
சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Leave a comment