20220414 160636 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் தவறுகளே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு கரணம்! – வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன்

Share

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் தவறுகளே இன்றைய பொருளாதார நெருக்கடி சூழலுக்கு காரணமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மற்றொரு தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையும், அதற்காக செலவழிக்கப்பட்ட நிதி எல்லாம் இணைந்த அரசாங்கத்தின் மிக மோசமான செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நெருக்கடியை தமிழ்த் தேசிய இனம் நீண்டகாலமாகவே சந்தித்துள்ளதுடன் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளனர்.

நாட்டில் இருக்கக்கூடிய அரசுத் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடுகின்றனர். அப்படி இல்லாது போனால் இந்த போராட்டம் நீர்த்து போவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே இருக்கும்.

சர்வதேச நாணய நிதியம் மூலமாக நாடு பொருளாதார நெருக்கடியான சூழலில் இருந்து மீண்டாலும் பக்க விளைவுகளை நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

வரி அதிகரிப்பு,பொருள் விலை அதிகரிப்பு, அரசு ஊழியர்கள் உடைய எண்ணிக்கையைக் குறைத்தல், நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டும் நிலைமைகள் உருவாகும் நெருக்கடி ஏற்படும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...