fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

Share

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உயிரிழந்தவர் பேராதனை முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும்,
இயற்கை உபாதையை கவனிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் வந்து, அதிகாலை 4.05 மணியளவில் T56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காவலர் உடனடியாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கரை வருட சேவைப் காலத்தைக் கொண்டுள்ள காவலர், முகநூல் ஊடாக அறிமுகமான யுவதி ஒருவருடன் உறவில் இருந்துள்ள நிலையில்,
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே இவ்வாறு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...