point pedro
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரு. வைத்தியசாலை நீர் விநியோக தடை! – பதில் வைத்திய அத்தியட்சகர் விளக்கம்

Share

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று (12) செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீர் விநியோகம் தடைப்பட்டது சம்பந்தமாக ஊடகமொன்றில் செய்தி ஒன்று வெளியாகியிருந்த நிலையில் இது தொடர்பான விளக்கம் ஒன்றை வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் வெளியிட்டுள்ளார்.

இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நேற்றைய செய்தியில் மின்பிறப்பாக்கி பழுதடைந்தமையால் நீர் விநியோகம் தடைப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் என்ற வகையில் ஊடகங்களுக்கு விளக்கம் ஒனறை அளிக்க விரும்புகின்றேன்.

நேற்று பிற்பகல் நீர்த்தாங்கிக்கு நீரைச் செலுத்துகின்ற கிணற்றினுள் நீருக்குள் காணப்படுகின்ற மோட்டர் திடீரென பழுதடைந்துவிட்டது. எங்களது வைத்தியசாலையின் இயந்திரப்பகுதி ஊழியர்கள் கிணற்றிலிருந்து அம் மோட்டரை வெளியே எடுத்து அதனைப் பரிசோதித்தபோது அதனை உடனடியாக மீள இயக்க முடியாமலிருந்தது.

இதன் காரணமாக இன்னொரு பதிலீட்டு மோட்டரை கிணற்றினுள் இறக்கி பொருத்த முற்பட்டபோது கிணற்றினுள் இருந்த நீர்க்குழாயுடன் அது பொருந்தவில்லை. பின்னர் அதற்குரிய மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது.

எமது வைத்தியசாலை ஊழியர்கள் அதிகாலை 2 மணிவரை திருத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 2 மணிக்கு நீர் விநியோகம் சீராக்கப்பட்டது.

எமது வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுதடையவில்லை. சீரான மின் விநியோகம் மின்சார சபையினால் வழங்கப்படுகின்றது.

எமது வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலுள்ள சேமிப்பு நீர் முடிவடைந்த பின்னரே நீர் விநியோகம் தடைப்பட்டது.

நாம் உடனடியாக நீர் விநியோகத்தை சீராக்குவதற்குரிய முயற்சியை ஆரம்பித்து அதிகாலை 02 மணியளவில் நீர் விநியோகம் சீராக்கப்பட்டது – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...