பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

Share

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு திரும்பிக்கொண்டுவர முடியும் என முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அவரை நாட்டிற்கு திரும்ப கொண்டுவருவதற்காக அரசாங்கம் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவருவது சாத்திம் ஆனாலும் அது எளிதான விடயம் அல்ல என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்து, இன்டர்போலின் முழு ஆதரவுடன் பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அவரை இங்கு கொண்டுவருவதற்காக இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...