hehaliya
செய்திகள்இலங்கை

நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு

Share

நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு

கொரோனா பரவலைத் தடுக்கும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு இருக்கும். நாட்டை முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இன்று கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமை மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறுதல் ஆகியவை வைரஸ் பரவலுக்கு இடமளிக்கின்றன. இவை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

இதேவேளை, நாட்டில் தற்போதைய நிலைமை தொடர்ந்தால் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 200 ஐத் தாண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 200 ஐ எட்டும்போது, நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் ஆகக் காணப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் கொரோனாத் தொற்று நிலைமை கட்டுமீறிச் சென்றுள்ள நிலையில், இன்றோ நாளையோ பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் நடத்தப்படும் கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் கூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் பயணிகள் முனையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையக் கட்டிடம் (Passenger Terminal Building) அமைப்பதற்கான அடிக்கல்...

25 693c2181e5b05
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மண்சரிவு அபாயம்: முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் அபாயக் கட்டங்கள்!

மண்சரிவு என்பது உலகம் முழுவதும் மழைவீழ்ச்சி, நிலநடுக்கம், பனிப்பாறைகளின் செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் ஒரு இயற்கையான...

Australia
உலகம்செய்திகள்

சிட்னி துப்பாக்கிச் சூடு: 15 பேர் உயிரிழப்பு; துப்பாக்கிச் சட்டங்களைக் கடுமையாக்க அவுஸ்திரேலியா கவனம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பொண்டி கடற்கரையில் (Bondi Beach) நேற்று (டிசம்பர் 14) இடம்பெற்ற...

20251204105040
இலங்கைசெய்திகள்

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 200 தொன் அனர்த்த நிவாரணப் பொருட்கள் கையளிப்பு!

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 200 தொன் (Tons) அனர்த்த நிவாரணப் பொருட்கள் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர்...