3 1 4
இலங்கைசெய்திகள்

தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு: மூவர் பலி…பலர் படுகாயம்!

Share

தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு: மூவர் பலி…பலர் படுகாயம்!

Three Killed And Dozens Injured Bomb Thai Festival

தாய்லாந்தில்(Thailand) இடம்பெற்ற திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் வருடாந்த திருவிழா நடைபெற்றது.

இதன்போது விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி வெடிகுண்டு வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...