கொரோனாவால் கிராம அலுவலர்கள் மூவர் பலி!
கொரோனாத் தொற்றால் இதுவரை மூன்று கிராம அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர் என, அகில இலங்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் பணியாற்றும் 12 ஆயிரம் கிராம அலுவலர்களில் கிட்டத்தட்ட 500 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சுமார் 2 ஆயிரம் கிராம அலுவலகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் ஜகத் சந்திரலால் கூறினார்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை முன்வைத்த போதிலும், அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை அரசாங்கம் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
Leave a comment