ja.te .ho
செய்திகள்இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!

Share

யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனாத் தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது முக்கியமாகும். மக்கள் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்வது சிறந்ததாகும்.

அதேநேரத்தில் எமது வைத்தியசாலையில் இறந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி பெறாதவர்களே. எனவே தடுப்பூசி பெறுவதன் மூலம் இறப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...