காக்கைத்தீவு கடற்கரையில் சடலம் மீட்பு!!
கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில் இன்று நபரொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் இன்று இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது.
முகம் துணியொன்றால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமே இவ்வாறு ஒதுங்கியுள்ளது என தெரியவருகிறது.
Leave a comment