vijay
பொழுதுபோக்குசினிமா

புதிய சாதனையுடன் உச்சத்தைத் தொட்ட தளபதி! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Share

புதிய சாதனையுடன் உச்சத்தைத் தொட்ட தளபதி! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் பட்டியலில் முன்னிலையில் வகிப்பவர் தளபதி விஜய். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகின்றது.

தளபதியின் திரைப்படங்கள் என்னதான் சவால்களை எதிர்கொண்டாலும், மிகச் சாதாரணமாக தொடர்ச்சியாக 100 கோடி ரூபாவைக் கடந்து பெரும் வசூலைப் பெற்றுக்கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அவரது சம்பளமும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே வருகின்றது.

கொரோனாத் தொற்று நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ 250 கோடி வசூலைத் தாண்டி மிகப்பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது ‘பீஸ்ட்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், தற்போது தளபதி – 66 தொடர்பான லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது.

‘தளபதி – 66’ ஆவது படத்தை தெலுங்கு இயக்குநர் வாசி இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு 120 கோடி சம்பளம் நிர்ணகிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையுடன் விஜய் புதிய சாதனை படைத்துள்ளார். பிறகென்ன தளபதி ரசிகர்களின் கொண்டாட்டத்தை சொல்லவா வேண்டும்?

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...