image 54a5383ce7
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய மீனவர்களுக்கு மறியல்!

Share

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்

14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் இன்று (07) திங்கட்கிழமை மதியம் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சனிக்கிழமை (05) இரவு 2 படகையும் அதில் இருந்த சிறுவன் உட்பட இந்திய மீனவர்கள் 14 பேரையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்கள் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் போது மீனவர்களில் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(6) மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 மீனவர்களும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதன் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சிறுவன் உட்பட 14 இந்திய மீனவர்களையும் இன்று திங்கட்கிழமை (7) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...