இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாகவே இம்முறை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிரபல சிங்கள இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரபுக்கள், இராஜதந்திரிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகவே வருவார்கள்.
எனினும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிப்பதற்காகவே மோடி அங்கு வருகிறார் எனக் கூறப்படுகின்றது.
நல்லாட்சியின்போது, பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு அப்போதைய கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் அம்முயற்சி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் மோடியின் இலங்கை பயணம் இடம்பெறவுள்ளது.
#SriLankaNews