இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அரசை பதவி விலகுமாறு கோரி தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையினால் யாழ் நகரப் பகுதியில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“தடுமாறும் அரசே பதவி விலகு, மக்கள் வயிற்றில் அடிக்காதே” எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

#SriLankaNews
Leave a comment