Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

Share

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றுள்ள நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தின் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மழை பெய்யத் தொடங்கிய வேளையில், வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மின்னல் தாக்கத்தால் வீட்டின் உள்ளே பரவிய தீயைப் பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் உபகரணங்களும் தீயில் எரிந்து அழிவடைந்துள்ளன.

 

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...