அமைச்சரவையில் திடீர் மாற்றம்!!
அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல புதிய சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சராக செயற்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சு பதவியை வகித்த தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சு பதவியை வகித்த பவித்ரா போக்குவரத்து அமைச்சராகவும், மேற்படி அமைச்சு பதவியை வகித்த காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்சக்தி அமைச்சராக செயற்பட்ட டலஸ் அழகப்பெருமவிடம், கெஹலிய வகித்த ஊடகத்துறை அமைச்சு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அபிவிருத்தி இணைப்பு கண்காணிப்பு அமைச்சு பதவியும் கையளிக்கப்பட்டுள்ளது.
Leave a comment