அரசுக்கான மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டதென எதிரணிகள் அறிவிப்பு விடுத்துவரும் நிலையில், மக்கள் படை தம்முடன்தான் உள்ளது என்பதை காண்பிக்கும் விதத்திலான கூட்டமொன்றை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நடத்தவுள்ளது.
இதற்காக மே தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அன்றைய நாளில் கொழும்பு, காலி முகத்திடலில் பெருமெடுப்பில் மே தினக் கூட்டத்தை மொட்டு கட்சி ஸ்தாபகரான நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் . இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுவருகின்றன.
குறித்த மே தின கூட்டத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளாட்சிமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜுன் மாதம் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment