4 46
இலங்கைசெய்திகள்

வலுக்கும் உறவு : சீனாவில் புதிய தூதரகத்தை திறக்கும் அநுர அரசு

Share

வலுக்கும் உறவு : சீனாவில் புதிய தூதரகத்தை திறக்கும் அநுர அரசு

சீனாவின்(china) செங்டு நகரில்  இலங்கை(sri lanka) துணைத் தூதரகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின்(anura kumara dissanayake) சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார்.

“அந்த மாநிலத் தலைவர் எங்களுக்கு தேவையான இடத்தையும் வசதிகளையும் இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டார். அதன்படி, எதிர்காலத்தில் செங்டு நகரில் வெளியுறவு அமைச்சகமாக ஒரு புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.”

ஜனாதிபதியின் சீனப் பயணம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் போது, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து இரு தரப்பினரும் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...