14 6
இலங்கைசெய்திகள்

குறைந்தது சனத்தொகை : சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம்

Share

குறைந்தது சனத்தொகை : சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம்

சீனாவில்(china) அண்மைக்காலமாக இளைஞர்கள் இடையே காதல், திருமணம் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி வருவதால் திருமணங்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இளைஞர்களிடையே காதல், திருமணம் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக கல்லூரிகளில் காதல் தொடர்பான பாடங்களை சேர்க்க சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

உலக மக்கள் தொகையில் சீனா முதல் இடத்தில் இருந்த நிலையில் மக்கள் தொகையை குறைக்க கடுமையான சட்டங்களை இயற்றியது. இதனால் தற்போது மக்கள் தொகை குறைந்துள்ள அதே நேரம் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்களை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையை போக்கும் வகையில் சீன அரசு தனது மக்களை அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியதுடன், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

தற்போது சீனாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காதல், திருமணம், குடும்ப உறவு ஆகியவை குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்களுக்கு கற்பிக்குமாறு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....