Navithanveli
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிட்டங்கி வீதியின் மேலாக பரவும் வெள்ள நீரால் மக்கள் பாதிப்பு!-

Share

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும், கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது.

கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் பரவ நீர் ஆரம்பித்தமையால், இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை,

4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு, நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையினை அரசு செவிசாய்க்கவில்லை என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல நாட்களாகப் பெய்து வரும், மழையினால் அதிகமான மழை நீர் வடிந்தோட முடியாமல், வயல் பகுதிகளில் தேங்கி நிற்பதனால் நெற் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...