pa 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலி.மேற்கு பிரதேச மதகுகள் புனரமைக்கப்பட வேண்டும்! – வட மாகாண ஆளுநருக்கு கடிதம்

Share

யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளை சீராக புனரமைப்பதை உறுதிப்படுத்துமாறு வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வலி.மேற்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் வலி.மேற்கு பிரதேச சபை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

மேற்படி வீதி புனரமைப்பின்போது மானிப்பாய்க்கும் சங்கானைக்கும் இடையே பெரியதும் சிறியதுமாக ஆறு வரையான மதகுகள் புனரமைக்கப்படாமல் காப்பெற் இடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மதகுகள் அடுத்துவரும் சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அவற்றைப் புனரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மதகுகளும் புனரமைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு சபை உறுப்பினர் ந.பொன்ராசா பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரைக் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

இதையடுத்தே, வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு நேற்று வியாழக்கிழமை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...