அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டாம் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்வதற்காக ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லுக்கு 50 ரூபாவையும் ஒரு கிலோகிராம் சம்பா நெல்லுக்கு 52 ரூபாவையும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
இந்த நிர்ணயம் காரணமாக, அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு அரிசியை எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்ற கேள்வியை அரிசி உற்பத்தியாளர்கள் முன்வைக்கின்றனர்.
ஆகவே அரிசிக்கு நியாயமான விலையை வழங்கத் தவறும் பட்சத்தில் அரிசி வர்த்தகத்தில் இருந்து விலகப்போவதாக சங்கம் எச்சரித்துள்ளது.
ஒரு கிலோகிராம் நாட்டரிசிக்கு 110 ரூபாவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கு 130 ரூபாவும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசிக்கு 160 ரூபாவும் என விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும்.
Leave a comment