ayar
செய்திகள்இலங்கை

அனைவர் வாழ்விலும் ஒளியை ஏற்றுவோம்! – தீபாவளி வாழ்த்து செய்தியில் யாழ். ஆயர்

Share

2021ஆம் ஆண்டிற்குரிய ஒளியின் பெருவிழாவான தீபாவளிப் பெருவிழாவை உலகம் முழுவதிலும் கொண்டாடும் இந்து சமய சகோதரர்கள் அனைவர்க்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.

இவ்வாறு தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

குடும்ப உறவுகள் மற்றும் நட்பு வட்டங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் எப்போதும் மகிழ்வானவை. அன்பையும் உறவையும் வளர்ப்பவை. இந்த வகையில் 2021ஆம் ஆண்டிற்குரிய தீபாவளிப் பெருவிழா உங்கள் குடும்ப மற்றும் நட்பு உறவுகளைப் புனிதப்படுத்தி புதியதாக்கி அன்பையும் புரிந்துணர்வையும் எதிர்கால நம்பிக்கையையும் வளர்த்து ஒளியைத் தரும் ஒரு விழாவாக அமைய வாழ்த்துகிறோம்.

இருளைப் பழிப்பதை விட ஒளியைப் ஏற்றுவதே சிறந்தது. ஒளியை எல்லோரும் விரும்புகிறார்கள். ஒளியில் எல்லோரும் வாழவே விரும்புகிறார்கள். இருளைப் பார்த்து எல்லோரும் பயப்பிடுகிறார்கள். இருள் வேண்டாமென ஒளியை ஏற்றுகிறார்கள்.

இருளுக்கும் ஒளிக்குமான போராட்டத்தில் ஒளியே வெல்ல வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் நன்மையே வெல்ல வேண்டும்.இருள் நிறைந்த துன்பமான வேதனை மிக்க வாழ்வை விடுத்து ஒளிமிகுந்த மகிழ்ச்சியான வாழ்வையே எல்லோரிற்கும் நாம் ஆசிக்கவேண்டும். இதையே நற்செய்தி ஏடுகள் விவரிக்கின்றன.

கொரோனா என்னும் இக் கொடிய நோய் உலக மக்கள் அனைவரையும் எந்த வேறுபாடுமின்றி தாக்கி அழித்து வருகிறது. எல்லா மக்களும் ஏதோ ஒரு வகையில் இந்தக் கொடிய நோயின் விளைவால் தாக்கப்பட்டுள்ளனர். தொழில் துறையின்றி மக்கள் வளம் இழந்து வாழ்கின்றனர். கோலங்கள் கொண்டாட்டங்கள் பயணங்கள் இன்றி மக்கள் வீடுகளில் முடங்கி விரத்திக்குள்ளாகியுள்ளனர். பாடசாலைகள் விளையாட்டுக்கள் என்பன இன்றி மாணவர் சோர்ந்து போயுள்ளனர்.

இவர்களோடுகூட வாழ்வில் நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழ்வோர் – எல்லாரும் கைவிட்டு வீடுகளிலும் வயோதிப இல்லங்களிலும் தனிமையில் வாடுவோர் – வைத்திய சாலைகளிலும் வீடுகளிலும் வருத்தத்தில் இருப்போர் – சிறையிலும் தடுப்பு முகாம்களிலும் அல்லற்படுவோர் – அடுத்த நேர உணவு என்ன என ஏங்குவோர் எனப் பலர் உள்ளனர். இவர்களே இன்று இருளில் இருப்பவர்கள். இவர்களுக்கே நாம் இன்று ஒளியேற்ற வேண்டும்.

இவர்களுடைய வாழ்வில் ஒரு தரிசிப்பால் – ஒரு அன்பான வார்த்தையால் – அமைதியான செவிமடுத்தலால் – நம்பிக்கையூட்டும் ஒரு செயலால் – ஒரு சிறிய அன்பளிப்பால் – ஒரு நேர உணவால் கொறோண விதிமுறைகளகை; கடைப்பிடித்து ஒளியைக் காட்ட முடியுமாயின் அதுவே நாம் கொண்டாடும் சிறந்த அர்த்தமுள்ள தீபாவளிப் பெருவிழாவாகும.;

நம் வாழ்வு ஒளியின் வாழ்வாகும். நாம் உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க என்ற வார்த்தைகளை நம்முடையதாக்கி வாழும் மக்களாவோம். ஒளியின் விழாவில் இறையாசீர்மிக்க வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...