வீடொன்றிலிருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு!

IMG 20211224 WA0015

தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை, தியத்தலாவைப் பொலிஸார் (இன்று) 24-12-2021ல் மீட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டுரிமையாளரான ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

தியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்ணாயக்கவிற்கு கிடைத்த ரகசியத் தகவலொன்றினையடுத்து, அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில், அங்கு சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியைக் கண்டுபிடித்து, மீட்டனர்.

அவ் வெடிபொருள் பொதியில், ஆர்.பி.ஜி. ரக பயிற்சிக்கான வெடிகுண்டு – 01, 82 மோட்டார் ரக வெட் குண்டு – 01, டி. 56 எபோ ரக குண்டுகள் – 147, எம்.ஐ.எல்.எஸ். ரக கைக்குண்டு – 01, வெற்றுமெகசின் – 02, சன்னப்பெட்டி – 01, புகைக்குண்டு – 01, தலைக்கவசம் – 01, நீர்போத்தல் – 01 ஆகியன அடங்கியிருந்தனவென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்னாயக்க கூறினார்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களுடன், வீட்டுரிமையாளரையும், பொலிசார் கைது செய்தனர்.

தியத்தலாவைப் பொலிசார் தொடர்ந்தும், மேற்படி விடயம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version