காணிப் பிரச்சினையால் கைகலப்பு - ஒருவர் பலி
செய்திகள்இலங்கை

காணிப் பிரச்சினையால் கைகலப்பு – ஒருவர் பலி

Share

காணிப் பிரச்சினையால் கைகலப்பு – ஒருவர் பலி

காணிப் பிரச்சினையால் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், யாழ்ப்பாணம் சித்தங்கேணி, கலைவாணி வீதி பகுதியில், இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் காணிப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், இன்று காலை அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது குறித்த நபரும் அவரது மகளும் அயல் வீட்டுக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த மகளும் குறித்த நபரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்தார். அத்தோடு மேலதிக சிகிச்சைக்காக மகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...