IMG 20220210 WA0013
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காங்கேசன்துறை விபத்து! – ஒருவர் பலி

Share

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இன்று காலை தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்களும் எதிதெதிரே மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி காங்கேசந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், இளவாலை, உயரப்புலத்தை சேர்ந்த 18 வயதுடைய சசிக்குமார் லிசான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...