கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11 – 12 திகதிகளில் இடம்பெறவுள்ளது.
தற்போதுள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 100 பேர் மாத்திரமே கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு அனுமதிப்பது என வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறுகிறது.
குறித்த கலந்துரையாடலில் கடற்படையின் உயரதிகாரிகள் நெடுந்தீவு பிரதேச செயலர் நெடுந்தீவு பிரதேச சபை செயலர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment