கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் கச்சதீவு செல்வதற்காக பொதுமக்கள் குறிக்கட்டுவானில் இருந்து புறப்பட்டனர்.
இன்று மதியம் ஒரு மணியளவில் குறிகட்டுவானில் தரித்து நின்ற வடதாரகை மூலம் கச்சதீவு செல்வதற்கான படகுப் பயணத்தை இலங்கை கடற்படை ஒழுங்குசெய்திருந்தது.
மதகுருமார், பக்தர்கள், சுகாதார பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக சிநேகபூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக வடபகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர் சங்க பிரதிநிகளும் கச்சதீவுக்கு பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பயணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment