பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டார்.
நாடாளுமன்றத்தின் 122 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர்.
இதற்கமைய அமைச்சர்களான காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, நிமல் லான்சா, ஜானக வக்கும்புர, வியாழேந்திரன், தேனுக விதானகமகே, ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாகிர் மாகார், திலிப் வெதஆரச்சி, மனுஷ நாணயக்கார, கே.காதர் மஸ்தான், அசோக்க பிரியந்த, சிவஞானம் சிறீதரன், துஷார இந்துனில் அமரசேன, முஜிபுர் ரஹுமான், ரோஹினீ குமாரி விஜேரத்ன, வருண லியனகே, ஜகத் குமார சுமித்திராரச்சி, கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, குலசிங்கம் திலீபன், நிபுண ரணவக, ராஜிகா விக்ரமசிங்ஹ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் இக்குழுவின் உறுப்பினர்களாகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமரா வெல்கமவுக்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்னவும், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.முஷாரப்புக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment