யாழ்.கீரிமலை கடலில் மூழ்கி இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார்.
தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
நண்பர்களுடன் கீரிமலை கடலில் இன்று நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Leave a comment