யாழ்ப்பாணம் மாநகரசபை அமர்வு வரலாற்றில் முதல் தடவையாக செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம், மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.
வரலாற்றில் முதல் தடவையாக, நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
#SriLankaNews
Leave a comment