இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை பார்வையிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினரை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
நூலகத்துக்கு விஜயம் மேற்கொண்ட சீனத் தூதுவர் நூலகத்திற்கு ஐந்து மடி கணினிகளையும் சில புத்தகங்களையும் வழங்கி வைத்ததோடு நூலகத்தையும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://tamilnaadi.com/news/local/2021/12/15/chinese-officials-in-jaffna/
#SriLankaNews
Leave a comment