arrest scaled
செய்திகள்இந்தியாபிராந்தியம்

நாடளாவிய சுற்றிவளைப்பு – 13 பேர் கைது!

Share

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 8 மதுபான சுற்றிவளைப்புகளில் எண்மர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 203 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 571 லீற்றர் கோடா, ஆறு செப்புத் தகடுகள், இரண்டு எரிவாயு அடுப்புகள், ஒரு எரிவாயு அடுப்பு என்பவற்றையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 240 புகைத்தல் பொருட்களுடன் கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநாகல், பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாரளுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாரளுவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனஹடுவ வாவிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி பல்வேறு வகையான மரப்பலகைளுடன் பயணித்த டிரக்டரை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார் பலகைகளுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். பல்லேபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், கருவலகஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரியன்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திமின்றி மரம் அறுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 21, 47 வயதுகளையுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...