எதிர்வரும் நாள்களில் நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த அபாயநிலை ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும் டிசெம்பர் மாதம் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறி தற்போது 60 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இதற்கு முன்னர் நாளாந்தம் சுமார் 2 லட்சம் கிலோ மரக்கறிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் மரக்கறிகளே கிடைக்கப்பெறுகின்றன என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கெப்பிட்டிபொல மொத்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளன ¨ªஎனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலை எதிர்வரும் நாட்களில் தொடருமாயின் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நாடளாவிய ரீதியில் ஏற்படும் என வர்த்தகர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews

