மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடா?

Kerosene 1

நாட்டில் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நபர் ஒருவருக்கு ஐந்து லீற்றர் மண்ணெண்ணை விற்பனை செய்யும் நடைமுறையானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதல்ல என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட நாட்களாக ஐந்து லீற்றர் வரையறை நாட்டில் அமுலில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகளவில் களஞ்சியப்படுத்தி வைத்துக் கொள்வதனைத் தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு 05 லீற்றர் என்ற வரையறை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version