ஆப்பிள் நிறுவனம் தனது சின்னம் கொண்ட சிறிய துணியை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சுத்தம் செய்ய மென்மையான சிறு துணியை ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்தது.
இதன் விலை இந்திய ரூபாயில் 1900 என அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அன்லீஷ்டு 2021 நிகழ்வில் புதிய சாதனங்கள் பலவற்றை அறிமுகம் செய்தது.
அவற்றில் புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச், 16 இன்ச் மேக்புக் ப்ரோ, ஏர்பாட்ஸ் 3 போன்ற சாதனங்கள் அடங்கும்.
மேலும் அறிமுக வீடியோ நிகழ்வு நிறைவுற்றதும் ஆப்பிள் சின்னம் பொறித்த துணி ஒன்றை தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது.
இந்த துணியை கொண்டு ஐபோன், ஐபேட், மேக்புக், ஏர்பாட்ஸ் மற்றும் வேறு பல ஆப்பிள் நிறுவன சாதனங்களை சுத்தம் செய்ய முடியும். துணிக்கான விவர குறிப்பில் அனைத்து ஆப்பிள் சாதனங்களின் திரைககள் மற்றும் நானோ-டெக்ஸ்ச்சர் கிளாஸ் சுத்தம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு ஆகிறது .
இந்த துணி தற்போது சந்தையில் கிடைக்குமெனவும் அதோடு அதை அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
#technology
Leave a comment